கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துக்கள்
கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவடையும் என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் கனேடிய அரசு எதிர்பார்த்ததை விட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கனடா வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை 6.2 சதவீதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த நாடு அறிவித்திருந்தது.
கனடா வங்கியின் கணிப்பு
எனினும், கனடா வங்கியின் கருத்து கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்கு முரணாக உள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறாக இந்த வருடம் ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதமாக இருந்ததாக கனடா வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனேடிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam