கனடாவில் இலகுவாக குடியுரிமை - வெளியான அறிவிப்பு!
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் தொடர்பான சட்டம், இந்த மாதம் பொது மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இது செனட்டின் மதிப்பாய்வில் உள்ளது.
இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டவுடன், கனேடிய பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் மற்றும் தத்தெடுத்த குழந்தைகள், குடியுரிமை பெற உரித்துடையவர்களாக மாறுவார்கள்.
ஒரு கனேடிய பெற்றோர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அல்லது தத்தெடுப்பதற்கு முன்பு கனடாவில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசித்திருந்தால், அந்தக் குழந்தை குடியுரிமைக்குத் தகுதி பெறும்.
தேவைப்படும் ஆதாரங்கள்
பழைய விதிகளின் கீழ் குடியுரிமையை இழந்தவர்களுக்கு இது குடியுரிமையை பெற உதவும்.

இந்த புதிய விதிகள், குடும்பங்களை மீண்டும் இணைப்பதோடு கனடாவில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து கனேடியர்களுக்கும் சம உரிமைகள் இருப்பதை உறுதி செய்யும்.
இதற்கு, பெற்றோரின் கனேடிய குடியுரிமைக்கான ஆதாரம், கனடாவில் செலவழித்த நேரத்தைக் காட்டும் ஆவணங்கள் மற்றும் பிறப்பு அல்லது தத்தெடுப்பு பதிவுகள் போன்ற ஆதாரங்கள் தேவைப்படும்.

இந்நிலையில், செனட் ஒப்புதல் மற்றும் அரச ஒப்புதலுக்குப் பிறகு 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |