அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது ! இந்தியாவின் பதிலடி - முக்கிய செய்திகளின் தொகுப்பு
அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது. இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,



