வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம்..!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியாவில் நடை்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (08) மாலை வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
அரசியல் பிரமுகர்கள்
முன்னதாக குருமன்காடு பகுதியில் இருந்து மங்கள இசை முழங்க தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள் நிகழ்வு மைதானத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அங்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது.
முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையி தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
