மத்திய வங்கியின் ஆளும் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
நாடாளுமன்றில் பொது நிதிக்கான குழு, மத்திய வங்கியின் ஆளும் குழுவை அடுத்த வாரம் குழுவின் முன் அழைத்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது அண்மையில் மத்திய வங்கி ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
70 சதவீத ஊதிய உயர்வு
முத்திய வங்கி சுயாதீனமான செயற்பாட்டைக் கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பின்படி சட்டமன்றத்திற்கு பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு 70 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
எனினும் இது ஏற்கனவே தொழிற்சங்கங்களுக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தீர்மானத்தின்படியே மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |