இலங்கையில் சுயாதீன தகவல் உரிமை ஆணைக்குழுவை உருவாக்குமாறு அழைப்பு
எதிர்வரும் செப்டம்பரில், இலங்கையில் சுயாதீன தகவல் உரிமை ஆணைக்குழுவை உருவாக்குமாறு, இலங்கை, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆர்டிஐ என்ற ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பரில் முடிவடைகிறது.
இதனையடுத்தே, 2016 ஆம் ஆண்டின் 12 வது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு ஏற்ப புதிய ஆணையாளர்களை நியமிக்குமாறு, இலங்கை டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.
RTI சட்டத்தின்கீழ், RTI என்ற, தகவல் அறியும் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இதில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் ஐந்து வருட காலத்திற்கு சேவை செய்கிறார்கள். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியால் நியமனங்கள் செய்யப்பட்டன.
இருப்பினும், 20 வது திருத்தம், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்றியுள்ளது. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவை இனி செயல்படாது மற்றும் நாடாளுமன்ற பேரவையே இயங்குகிறது.
எனவே, RTI ஆணைக்குழுவின் பதவிகளை நிரப்புவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிற பொது சமூக அமைப்புகளிடமிருந்துநாடாளுமன்ற பேரவை , பரிந்துரைகளைப் பெறுகிறது.
இது குறித்து இலங்கை, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் பணிப்பாளர் நடிசானி பெரேரா கருத்துரைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணையம் மக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்கும் பாராட்டுக்குரிய முடிவுகளை வழங்கியது.
தகவல் அறியும் ஆணைக்குழு ஒரு சுதந்திர அமைப்பாக அதன் திறனில் செயல்பட்டதால் அதனால் இதைச் செய்ய முடிந்தது.
இந்த நிலையில், ஆணையத்தின் சுயாதீனமான தன்மையை உறுதிசெய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப, புதிய ஆணையாளர்களை, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிப்பார் என்று இலங்கை, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
