லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விளகம் கோரும் நுகர்வோர் விவகார அதிகாரசபை
எரிவாயு விலையை உயர்த்தியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்றைய தினம், நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முன்னிலையாகுமாறு லாஃப் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி முதல் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1775 ரூபாவினால் உயர்த்தப்பட்டது.

சர்வதேச சந்தையில் வரிவாயு விலை உயர்வு, கப்பல் கட்டண அதிகரிப்பு, காப்புறுதி கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளினால் விலை உயர்த்தப்படுவதாக லாஃப் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த விலை ஏற்றத்தின் ஊடாக மேலதிக வருமானத்தை எதிர்பார்க்கவில்லை என நிறுவனத்தின் பணிப்பாளர் நளிந்த குருகுலசூரிய தெரிவித்திருந்தார்.
உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளினால் இந்த ஆண்டில் 12.5 கிலோ கிராம் எடையுடைய சிலிண்டன் ஒன்றிற்கான செலவு 706 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பினால் அதனை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில் விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு கோரி லாப்ஃ நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்தல் விடுத்துள்ளது.