கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Dec 18, 2022 12:42 AM GMT
Report

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் | Businessman Dinesh Schaffter Dead Crime

சம்பவம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட 143 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலம் பதிவு 

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்களைப் பயன்படுத்தி பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை திட்டமிட்ட கொலையா? அல்லது மிரட்டி அதிக தூரம் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கைரேகை உத்தியோகத்தர்கள் ஏனைய விஞ்ஞான ஆதாரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் | Businessman Dinesh Schaffter Dead Crime

முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான 51 வயதான தினேஷ் சாப்டர், நேற்று (15) பிற்பகல் 2.05 மணியளவில் கொழும்பு 07, மால் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 143 கோடி ரூபாவை மோசடி செய்த BT என்ற வர்த்தகரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தமது நிறுவனத்தின் செயல் அதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், லைவ் லொகேஷனை அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மதியம் 2.05 மணியளவில் தினேஷ் சாப்டர் வீட்டை விட்டு வெளியேறி, பிற்பகல் 2.48 மணிக்கு,தினேஷ் சாப்டர் தனது மனைவி மற்றும் நிர்வாக அதிகாரியுடன் நேரலை இடத்தைப் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், அவர் பொரளை மயானத்தில் இருந்தமையை உறுதி செய்துள்ளது.

இருப்பினும், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அது தொடர்பான இணைப்புகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் | Businessman Dinesh Schaffter Dead Crime

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் படி, தினேஷ் சாப்டரின் கார், காசல் வீதிக்கு அருகில் உள்ள பண்ணை வீதியில் உள்ள வாயில் ஊடாக பொரளை மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இத்தகவலின் அடிப்படையில் பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியூடாக ராஜகிரிய நோக்கி சென்ற நிர்வாக அதிகாரி தினேஷ் சாப்டரின் கார் பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார். பின்னர் கைகள் பிளாஸ்டிக் கம்பியால் கட்டப்பட்டிருப்பதும், கழுத்தில் கம்பியால் கட்டப்பட்டிருப்பதும், மார்புப் பகுதியும் இறுக்கமான முறையில் கட்டப்பட்டிருப்பதினையும் அவதானித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் | Businessman Dinesh Schaffter Dead Crime

பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகளுக்காக வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இரண்டு இடங்கள் உள்ளன, இவ்வாறானதொரு பின்னணியில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் சாப்டரின் கார் மயானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொரளை பொது மயானத்தில் நேற்றுமுன்தினம் 6 மரணங்களின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதாகவும், இதனால் அதிகளவான வாகனங்களும் அதிகளவான மக்கள் மயானத்துக்குள் பிரவேசித்துள்ளதாகவும் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சிசிடிவி கமராக்களின் காட்சிகள்

இதற்கமைய, தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பான தகவல்களைக் கண்டறிய அவர் பயணித்த வீதியைச் சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிசிடிவி கமராக்களின் காட்சிகள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய 5 பொலிஸார் கொண்ட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,கொலை சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கொழும்பை உலுக்கிய தமிழ் வர்த்தகரின் கொலை விவகாரம்!முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் | Businessman Dinesh Schaffter Dead Crime

பிணைமுறி மோசடி

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்நாட்டில் இடம்பெற்ற திறைசேரி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தினேஷ் ஷாப்டர் வழங்கிய சாட்சியத்தின் மூலம் பல உண்மைகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தினேஷ் ஷாப்டர் வழங்கிய வாக்குமூலம் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கம் 223 இல் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,அக்காலத்தில் தினேஷ் ஷாப்டர் வழங்கிய சாட்சியங்கள் பலருக்கு சிக்கலாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US