கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொதிகளுடன் சிக்கிய நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் சிகரட்டுகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொண்டு வந்த, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப்பொதி
சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 100 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri
