கிளிநொச்சியில் வியாபார நடவடிக்கைகளுக்காக 34 கடைகள் திறந்து வைப்பு
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைக்கு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வினால் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 40 கடைத் தொகுதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
