வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள்! ரஜீவன் எம்.பி வழங்கியுள்ள பணிப்புரை
வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை மக்களின் நலன் கருதி கேவில்வரை செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பணித்துள்ளார்.
நேற்றைய தினம்(2.1.2025) கேவில் நித்தியவெட்டை பிரதான வீதி புனரமைப்பிற்கான அடிக்கல்வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு சில நாட்கள் கேவில் வரை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு பின்பு அதை கட்டைக்காட்டுடன் நிறுத்திக் கொள்வதாக ஊடகவியலாளர் ஒருவரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
[8FXRWQP]
போக்குவரத்து சேவை
அவ்வாறு ஒரு சில நாட்கள் கேவில் வரை சேவையில் ஈடுபடுவது தவறு என்றும் உரியவர்கள் உரிய முறையில் மக்களுக்கு சேவை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த வீதி புனரமைப்பிற்கு பின் போக்குவரத்து சேவை முழுமையாக பூர்த்தி அடையும் என்றும் ரஜீவன் தெரிவித்தார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam