பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது! போக்குவரத்து பிரதி அமைச்சர்
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், தற்போதைக்கு பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போதைய பேருந்துக் கட்டணத் திருத்தச் சமன்பாட்டின் படி பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படும். 'எரிபொருள் விலை அதிகரிப்பால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படப் போவதில்லை.
இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்
அதிகரிக்கபபட்ட எரிபொருள் விலை
பேருந்துக் கட்டணங்கள் சமன்பாட்டின் படியே அதிகரிக்கப்படும்.. அதன்படி, எரிபொருள் விலையில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படும்.

தற்போது அதிகரிக்கபபட்ட எரிபொருள் விலை உயர்வு அந்த வரம்பைத் தாண்டாததால், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது ' என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan