அதிகரிக்கப்பட்டது பேருந்து கட்டணம்
புதிய இணைப்பு
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த அபிவிருத்தியானது நாளை சனிக்கிழமை முதல் (02.09.2023) நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
பேருந்து கட்டணம்
இதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
