கண்டியில் திடீரென இடிந்து விழுந்த கட்டடம்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டி, ஈ.எல். சேனாநாயக்க வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 6 மாடிக்கட்டடமொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது இடிந்து விழுந்த கொன்கிரீட் துண்டுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வெளிப்புறமாக நீட்டப்பட்டிருந்த கொன்கிரீட் பகுதியொன்று இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri