நான் ஹிட்லரென்றால் நீங்கள் ரஷ்யாவா! அநுரவின் கேள்வியில் மூக்குடைப்பட்ட கம்மன்பில
என்னை ஹிட்லர் என்று கூறும் நீங்களெல்லாம் ரஷ்யாவா இல்லை அமெரிக்காவா என்று ஜனாதிபதி அநுர குமார எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் சபையில் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனக்கு பிரச்சினையில்லை..
இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன்போது, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சிக்கும், ஜனாதிபதி அநுரவை ஹிட்லருக்கும் ஒப்பிட்டு கருத்துக்களை வெளியிட்டு பேரணிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் இன்றைய கருத்து அமைந்திருந்தது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எப்படியான நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எங்களது கொள்கையில் மாற்றம் இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.
மக்களுக்கு அநீதி ஏற்படுத்தும் செயற்பாடுகள், ஊழல் மோசடிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாம் தீவிரமாக செயற்படுவொம். இதற்காக எம்மை ஹிட்லர் என்று குறிப்பிட்டாலும் அது எமக்கு பிரச்சினையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.