ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ள மொட்டுக்கட்சி : செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அவரையே ஆதரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவாகியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது பிரச்சினையில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாடு தற்பொழுது வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், இதன் கௌரவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே சென்றடைய வேண்டுமென திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் அதிகாரபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன், மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam