ராஜபக்ச குடும்பத்திற்கெதிராக குரல் கொடுத்த பௌத்த பிக்கு கைது
ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேகந்தவில ராஹுல ஹிமி எனும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மாத்திரமன்றி ஹம்பாந்தோட்டையிலும் இவர் ராஜபக்ச தரப்புக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.
அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தின் சுற்றாடலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சூழல் , காடழிப்பு விடயங்களுக்கு எதிராகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை வேகந்த ராஹுல ஹிமி வீரகெட்டிய பொலிஸாரினால் வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam