இலங்கை பொலிஸாருக்கு எதிராக பிரித்தானிய இளம்பெண் பரபரப்புக் குற்றச்சாட்டு
பிரித்தானிய சமூக ஆர்வலரான Kayleigh Fraser, இலங்கைக்கு மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காகச் சென்றிருந்த நிலையில், தான் பாலியல் தாக்குதலுக்காளாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னிடம் பேச விரும்புவதாகக் கூறி வெலிகம (Weligama) பொலிஸார் தன்னை அழைத்ததாகவும், தான் பொலிஸ் நிலையம் சென்றபோது அங்கிருந்த நான்கு பொலிஸாரில் மூவர் தன்னைத் தாக்கியதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.
தான் முன்பு கொடுத்த அறிக்கை உண்மையானதல்ல என்று கூறும் ஒரு கடிதத்தை எழுதிக்கொடுக்குமாறு தன்னை பொலிஸார் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததாகவும் Kayleigh தெரிவித்துள்ளார்.
வெகுநேரம் காக்கவைக்கப்பட்ட தான் அழுததாகவும், அதைக் கண்ட பொலிஸார் தன்னைக் கேலி செய்ததாகவும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார் Kayleigh.
தாங்கள் சொல்வதுபோல கடிதம் எழுதித்தராவிட்டால் இலங்கையில் பாதுகாப்பாக இருக்கமுடியாது என தனக்குக் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
இதற்கிடையில், இலங்கையில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து விமர்சித்ததற்காக, Kayleighயின் கடவுச்சீட்டை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
மேலும், அவரது விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 15ம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
