தமிழ் பாரம்பரிய முறையில் தைப்பொங்கலை கொண்டாடிய பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer), தமிழ் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்.
குறித்த நிகழ்வு டவுனிங் தெருவில் உள்ள பிரித்தானிய பிரதமரின் இல்லத்தில் நேற்று(20.01.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய விலைமதிக்க முடியாத பங்களிப்பை ஸ்டார்மர் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“டவுனிங் தெருவில் உங்களை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. விருந்தினராக மட்டும் இல்லாது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களித்தவர்களாக நீங்கள் இங்கு உள்ளீர்கள்.
தமிழ் சமூகத்திற்கு நன்றி
எங்கள் தேசத்திற்கு தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருப்பது நீங்கள் அறிந்ததே. அத்துடன், நமது முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் குறித்து நான் பெருமை கொள்கின்றேன்.
The British Tamil community makes a huge contribution to our country.
— Keir Starmer (@Keir_Starmer) January 20, 2025
Together, we can work towards a new season of light and abundance.
Happy Thai Pongal. pic.twitter.com/Z2k3dkEuHD
தமிழ் சமூகமாக நீங்கள் இந்த நாட்டிற்கு வழங்கிய அனைத்திற்கும் நன்றி. தைப் பொங்கலைக் கொண்டாடுவதற்காக, இன்று இரவு டவுனிங் தெருவில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.
தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியம், சமூக ஒற்றுமைக்கான நமது தேவையை நினைவூட்டுகிறது. இந்த கொண்டாட்டம் நம்பிக்கை மற்றும் நன்றி செலுத்துவதற்க்கான கொண்டாட்டம்.
🌾 I had the honour of introducing @Keir_Starmer as he hosted Thai Pongal celebrations in Downing Street.
— Uma Kumaran MP (@Uma_Kumaran) January 21, 2025
🇬🇧As the first British MP of Tamil heritage, it was wonderful to help bring people together for this special moment, celebrating the contributions of Tamils across the UK. pic.twitter.com/nX2asug9oX
எங்கள் தேசத்தை வளப்படுத்தியதற்கு நன்றி. இந்தத் தைப் பொங்கல் திருநாளில் ஒளி மற்றும் மிகுதியான ஒரு புதிய பருவத்திற்காக நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |