அமெரிக்காவால் முதலில் கண்காணிக்கப்பட்ட ஆயுத கடத்தல்! களத்தில் இறங்கிய பிரித்தானியா

United Kingdom
By Jenitha Mar 02, 2023 07:09 PM GMT
Report

ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின் போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக இன்று தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவால் முதலில் கண்காணிக்கப்பட்ட ஆயுத கடத்தல்! களத்தில் இறங்கிய பிரித்தானியா | British Navy Seizes Iran Weapons Shipment Off Oman

தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருப்பது அமெரிக்காவின் வான் கண்காணிப்பு மூலம் முதலில் அவதானிக்கப்பட்டது என ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த இப்படகு பிரித்தானிய கடற்படையின் எச்எம்எஸ் லன்காஸ்டர் யுத்த கப்பலினால் இடைமறிக்கப்பட்டது எனவும் பின்னர், ஈரானிய கடற்பகுதிக்கு இப்படகு கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய தூர ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியனவும் இப்படகில் அடங்கியிருந்ததாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஈரான் - யேமன் கடல்வழியில் 2000 துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை தாம் கைப்பற்றியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்திருந்தது.

அமெரிக்காவால் முதலில் கண்காணிக்கப்பட்ட ஆயுத கடத்தல்! களத்தில் இறங்கிய பிரித்தானியா | British Navy Seizes Iran Weapons Shipment Off Oman

யேமன் தலைநகர் சனாவை ஈரானிய ஆதரவு கொண்ட ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

அதையடுத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் யுத்தத்தில் தலையீடு செய்தனர். 2022 பெப்ரவரியில் ஹெளதி இயக்கத்துக்கு ஆயுதம் விநியோகிப்பதை ஐ. நா பாதுகாப்புச் சபை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US