கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண் கைது
இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரித்தானிய பெண் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள்
குறித்த பெண் நேற்று மதியம் நாட்டிற்கு வந்த பிறகு சுங்க வளாகத்தின் வழியாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டார்.
இதன்போது, அவரது பொதிகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 46 கிலோகிராம் எனவும் அதன் மதிப்பு 460 மில்லியன் ரூபாய் வரையில் இருக்கும் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரையும் போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
