இந்தியாவை அச்சுறுத்தும் கோவிட் வைரஸ்! - பிரித்தானியா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
கோவிட் -19 பெருந்தொற்றினால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது.
நாளாந்த கோவிட் பாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, ஒக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், கோவிட் -19 தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜோன்சன் கூறுகையில், “கோவிட் - 19 பெருந்தொற்று பாதிப்பால் மிகக்கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan