உகண்டாவிலிருந்து பணத்தைக் கொண்டு வர இதுவே சிறந்த தருணம் – நாமல்
உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இதுவே சிறந்த தருணம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சகல உதவிகளையும் செய்ய தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தேவை என்றால் ஓர் சத்திய கடதாசியையும் வழங்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான டொலர்
மஹிந்த ராஜபக்சக்கள் அல்லது வேறு யாரேனும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் பணத்தை மீட்டு எடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஜனாதிபதி அவர்களிடம் அந்த மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பணத்தை மீட்டு எடுக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் ஆளும் கட்சியினர் குறிப்பிட்ட மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான டொலர் பணத்தை நாட்டுக்கு கொண்டு வருமாறு அவர் கோரியுள்ளார்.
சத்திய கடுதாசி மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழி மூலமாகவோ தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாரென நாமல் ராஜபக்ஷ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |