அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைக்கும் ஆட்சியாளர்கள்! பேராயர் மல்கம் ரஞ்சித் குற்றசாட்டு
வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே, அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைத்து வருகின்றனர் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (28.08.2023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலமொன்றைக் கட்டுவதென்றால் அது குறித்து மக்களின் கருத்தினை அறிவதற்கு சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும்.
வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைத்து, எங்கள் நாட்டின் பகுதிகளைப் பல நாடுகளுக்கும் பல சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
முட்டாள்தனமான கதைகள்
அத்துடன், நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர் அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பால்கட்டப்போகின்றனர்.
இந்தியாவின் கருத்திற்கு அமையக் கடந்த காலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம், அவை அனைத்தும் முட்டாள்தனமான கதைகள்.
இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களைக் கையாண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை. அத்துடன், நாட்டின் நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம் சுதந்திரத்தைப் பெற்ற நாங்கள் தற்போது அதனை இழக்கப்போகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
