யாழில் 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(26) இடம்பெற்றுள்ளது.
அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன் டக்சிகன் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலை குணப்படுத்த தாயார் கை வைத்தியம் செய்துள்ளார்.

பின்னர் காய்ச்சல் வீரியமான நிலையில் 25ஆம் திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
எலிக்காய்ச்சல்
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam