வவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

Srilanka Falling Vavuniya News Boy Dies
By Thileepan Apr 18, 2022 07:09 PM GMT
Report

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வவுனியா - மதுராநகர்  

வவுனியா - மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் அருகில் காணப்பட்ட கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்ட போது தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் துணையுடன் மீட்கப்பட்ட போதும் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

வவுனியா - கல்நாட்டினகுளம்

வவுனியா - கல்நாட்டினகுளம் பகுதியில் கிணற்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (18) இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த சாந்தன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த சிறுவன் வீட்டிற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.  

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரும்புள்ளியான் குளத்தில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குளத்தினுள் மீன்பிடிப்பதற்கு வலையுடன் சென்ற குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளையின் தந்தையான பசுபதி ஜெகதீஸ்வரன் என்பவர் ஆவார்.

மேலும் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு | Boy Dies After Falling Into Dilapidated Well

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு | Boy Dies After Falling Into Dilapidated Well

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US