யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.01.2025) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குழந்தையின் தாயார், இன்று மதியம் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெயை எடுத்து குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடியுள்ளது.
மரண விசாரணைகள்
இதை அவதானித்த தாயார், குழந்தையை தூக்கியதுடன் குழந்தை மயக்கமடைந்தது. பின்னர் 1 மணியளவில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
