பெட்ரோலை ஏற்றிச் சென்ற பௌசர் தடம் புரண்டு விபத்து: பாரியளவு எரிபொருள் வீண்விரயம் (Video)
கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது.
விபத்துக்கான காரணம்
இதன்போது விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் எரிபொரு தாங்கி மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மழையுடனான காலநிலை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| இலங்கைக்கு பிரான்ஸ் வழங்கிய அன்பளிப்பு | 
 
    
     
    
     
    
     
    
     
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        