பிரபல உணவகத்தில் குடிநீரை அருந்திய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு, கொத்தடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு அருந்திய பின்னர் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த யுவதி நோய்வாய்ப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர் குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் போத்தல்
அப்போது, உணவகத்தில் சாப்பிட வந்த மருத்துவர், தண்ணீர் போத்தலை சோதனையிட்ட போது அது குடிநீர் இல்லை எனவும் அது surgical spirit என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அது பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri