அமெரிக்காவில் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிப்பு!
அமெரிக்காவில் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும்.
எச்சரிக்கை
இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின.

தற்போது 3ஆவது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது.
கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ, நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.