முல்லைத்தீவில் நகைக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நகை கடை உரிமையாளர் ஒருவர் இன்று காலை(03.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காட்டு அந்தோனியார் கோவில்
1ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இவர் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் அமைந்துள்ள காட்டு அந்தோனியார் கோவிலுக்குள் சடலமான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவர் வழமையாக காட்டு அந்தோனியார் கோவிலுக்கு சென்றுவருவதாகவும் இன்று(03) காலையும் கடையினை திறக்கவந்துவிட்டு கோவிலுக்கு சென்றுவருவதாக சொல்லி விட்டு சென்றுள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
