மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டப வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் இன்று(16.06.2024) சடலம் இருப்பதை அவதானித்த கிராமவாசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது உயிரிழந்தவர் வெல்லாவெளி, விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான்குட்டி புலேந்திரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபர் யானை தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட நபர், கடந்த வெள்ளிக்கிழமை(14) மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம்(16) இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri