வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியா பறங்கியாற்று பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(22.02.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
சடலம் மீட்பு
அதிகாலையில் பறங்கியாற்று பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தவர் மற்றும் அயலவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் ஆற்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பறங்கியாற்று பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபர் வனவிலங்குக்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு இறந்துள்ளாரா என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri