தென்னிலங்கையில் மீட்கப்பட்ட சடலத்தால் ஏற்பட்ட குழப்பம்
தென்னிலங்கை கடற்கரையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலத்தை பல மணி நேரங்களாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்துள்ளனர். இந்த நிலையில், கட்டுகொட இறுதிச் சடங்கு சேவையினர் வந்து உதவியுள்ளனர்.
ஜா கோட்டை கடற்கரையில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முடித்த போதிலும், உடலைக் கொண்டு செல்வதற்குத் தகுந்த வாகனம் கிடைக்காமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொறுப்பான அதிகாரிகளுக்கு தகவல்
இது தொடர்பாக நகர சபை மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை.

இதனால், சடலத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கட்டுகொட இறுதிச் சடங்கு சேவைக்குத் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களால் சடலத்தை காலி தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் 65 வயது இருக்கலாம் எனவும் அவரது அடையாளம் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.