தென்னிலங்கை வைத்தியசாலை ஒன்றில் குவிந்து கிடக்கும் குழந்தைகளின் சடலங்கள்
மாத்தறை வைத்தியசாலையில் பெருமளவு சிறுவர்களின் சடலங்கள் தேங்கி கிடப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு வருட காலமாக இறுதி நடவடிக்கை மேற்கொள்ள கொண்டு செல்லப்படாத குழந்தைகளின் 150 சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் பிரேத அறை குளிர்சாத பெட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்து பிறந்த குழந்தைகள், குறைந்த நிறையுடன் பிறந்த குழந்தைகள், கரு கலைக்கப்பட்ட மற்றும் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்த குழந்தைகளின் சடலங்கள், சத்திரசிகிச்சைகளின் மூலம் நீக்கப்பட்ட குழந்தைகளின் பாகங்கள் இவ்வாறு குவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வேறு சடலங்களின் பாகங்களை வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் குறித்த குளிர்சாதன பெட்டிகளில் உரிய முறையில் குளிராகமல் உள்ளமையினால் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் இவ்வாறு குவிக்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடற்பாகங்கள் சில மாதங்களுக்குப் பின்னர் டெண்டர் முறைப்படி தகனம் செய்யப்படும்.
எனினும் மாத்தறை வைத்தியசாலையில் ஒரு வருட காலகமாக தகன நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
