குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த படகானது இன்று(16.8.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.
இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தேடுதல் நடவடிக்கை
இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தவேளை நயினாதீவு தொடருந்தில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நேர்ந்தவேளை குறித்த படகில் 10 பயணிகள் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினரின் மற்றும், மீனவர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு நடைமுறைகள்
இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.
அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலதிக தகவல்- தீபன்