நைஜீரியாவில் 200 பேருடன் கவிழ்ந்த படகு : 27 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் (Nigeria) இடம்பெற்ற படகு விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொகி மாநிலத்திலிருந்து நைஜரை (Niger ) நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய தரமான தரைவழிப்பாதைகள் இன்மை
எனினும், விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவானவர்கள் ஏற்றப்பட்டதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, நைஜீரியாவில் போதிய தரமான தரைவழிப்பாதைகள் இன்மையால் படகுகளில் மக்கள் நெரிசலாக பயணம் செய்வது வழமையான விடயம்.
இந்தநிலையில், அதிகளவு மக்களை ஏற்றும் போது போதியளவு பாதுகாப்பு இன்மையே படகு விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது நைஜீரியாவில் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளதுடன், ஆபிரிக்காவின் சனத்தொகை அதிகமான நாட்டில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam