யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா மருத்துவமனையின் பின்புறமாக அமைந்துள்ள 12 ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகமளித்து குருதி கொடை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விபரங்கள் தேவையெனில் அல்லது இரத்த தான முகாம்களை
ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும்
தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
