பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய அமைச்சராக தமிழகத்திலிருந்து எல்.முருகன்
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சு எழுந்தபோதே தமிழகத்திலிருந்து யாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் பெயர் 43 புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் எல்.முருகனை மத்திய அமைச்சராக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று மாலை 4 மணியளவில் புதிதாகப் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியல் வெளியானது.
அந்தப் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கும் இடம் கிடைத்திருக்கிறது.
புதிய அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri