தமிழகத்தில் விடுதலைப்புலிகள்! - திமுக அரசுக்கு பாஜக கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகிற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டும் என பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது தேசிய புலனாய்வு நிறுவனம்.
சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், நேற்று முதல் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.
நேற்று சென்னையில் விடுதலை புலிகளின் முன்னாள் முக்கிய புள்ளி சபேசன்,போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் தொடர்பு என கைது.தமிழகத்தில் 12இடங்களில் மாவோயிச தீவிரவாதிகளின் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனை.
— Narayanan Thirupathy (@Narayanan3) October 12, 2021
தமிழகத்தின் நலன் குறித்து தினந்தோறும் விவாதம் செய்வதாக மார்தட்டிகொள்ளும்(1/3)
சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எச்சரிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam