அருட்தந்தை சிறில் காமினிக்கு மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைப்பு
இணையத்தள சந்திப்பு ஒன்றில் இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின்போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து, அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் மூன்றாவது நாளாக வாக்கு மூலம் அளிப்பதற்காக நாளை காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு சி.ஐ.டி.யினர் அருட் தந்தை சிறில் காமினி அடிகளார்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த இரு தினங்களில் மொத்தமாக 16 மணித்தியாலங்கள் அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டி.யினருக்கு வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் என்ற காரணத்தால், பிறிதொரு தினத்தன்று வருதாக கூறியிருந்த நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட சி.ஐ.டி யினர் நாளைய தினம் (22) வருமாறு அருட் தந்தை சிறில் காமினிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே நாளைய தினத்தன்று அருட் தந்தை சி.ஐ.டிக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.