முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் காணப்படும் பில்லியன் கணக்கு பணம்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Johnston Fernando Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa
By Independent Writer Nov 07, 2021 03:52 PM GMT
Report

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில்லியன் கணக்கில் பணம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி இலகுவாக செல்லக் கூடிய வகையில் அனைத்து உள்ளக மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட்ட 1500 வீதிகள் 'சுபீட்சத்தின் வீதிப் புரட்சி. பல ஆயிரம் வீதிகள் பூர்த்தியான நாள்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஒரே நாளில் மக்களிடம் கையளிக்கும் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் நேற்று வீரகெட்டிய மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியே, உங்களால் முன்வைக்கப்பட்ட சுபீட்ச நோக்கு கொள்கை பிரகடனத்தில் 100,000 கிலோ மீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என இந்நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.

நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள், உங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அப்போது உங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்த போது, ​​தேர்தலை நிறுத்தக் கோரி எதிரணியினர் நீதிமன்றத்துக்கும் சென்றனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை மீளச்செலுத்த நடவடிக்கை எடுத்தீர்கள்.

கோவிட் நெருக்கடியால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் நிறுத்த நீங்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை.மக்கள் தங்கள் இடுப்புப் பட்டிகளை இறுக்கிக்கொள்ள வரலாற்றில் சில அரசாங்க தலைவர்கள் அழைப்பு விடுத்தார்கள் .

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவாறே நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினார்.

2015ஆம் ஆண்டு இந்த நாடு கையளிக்கப்பட்ட போது, ​​எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்தது.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ 2019 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டை தான் பொறுப்பேற்றார்.அந்த சமயம் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்து இனங்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டிருந்தது.

கோட்டபாய ராஜபக்ஷ தோல்வியடைந்தவர் என்ற தவறான கருத்தை எதிர்க்கட்சிகள் சமூகத்தில் பரப்பி வருகின்றன.நாட்டுக்கு தடுப்பூசிகளை கொண்டு வர வழியில்லை என்றனர்.நாட்டில் தடுப்பூசி வழங்குவதை நடைமுறைப்படுத்த முறையான வழி இல்லை என்றனர்.

ஆனால் உங்கள் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இன்று வெற்றிகரமாக தடுப்பூசி ஏற்றிய முதல் 10 நாடுகளிடையே எமது நாடு உள்ளது.

கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றிய தலைவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.நீங்கள் மென்மையான தலைவர் என்று நான் மறுநாள் சொன்னேன்.

அதாவது நீங்கள் மிகவும் உணர்வுபூர்வமான தலைவர். மேலும் மிகவும் கவனமாக செயல்படும் தலைவர் என்பதால் தான் தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர் என்று மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுள்ளீர்கள்.

கோவிட் நெருக்கடி நிலை இருந்த போதிலும் நாட்டின் நெடுஞ்சாலை அபிவிருத்திகளை தொடர எங்களுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டில் கொடிய தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திய போதிலும், நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த 1500 வீதிகளை மக்களிடம் கையளிக்க முடிந்துள்ளது.கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியின் காரணமாகவே கொவிட் தொற்று எமது நாட்டிற்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

கோவிட் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று எமக்குத் தெரியாது.ஆனால் இந்த நாட்டை நாம் தொடர்ந்து அபிவிருத்தி செய்து வருகிறோம்.

மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பாடசாலைக்குச் செல்லவும், நோயாளிகளை தாமதமின்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும், விவசாயிகள் தங்கள் விவசாயப் பொருட்களை பொருளாதார மையங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும் இந்தப் பாதைகள் உதவும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் 68,000 வீதிகள் அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் 14,000 வீதிகளின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதில் 1,500 வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேலும் 2,500 வீதிகள் திறக்கப்படும்.

இந்நாட்டின் வீதிக்கட்டடமைப்பை போன்றே விவசாயிகளுக்கு நீர் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டு மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பாரிய திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.சேதனப் பசளை பயன்படுத்தி நம் நாட்டை பசுமை நாடாக மாற்ற விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.

இரசாயனப் பசளைக்கு பதிலாக சேதனப் பசளைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெறும் என நம்புகிறோம்.இத்திட்டம் வெற்றி பெறுவதை விரும்பாதவர்கள் இதற்கு எதிராக செயற்படுகின்றனர்.

நாங்கள் அமைத்த வீதிகளில் சென்று போராட்டம் நடத்துகிறார்கள். மக்கள் செத்து மடிவதைப் காண விரும்பும் ஐம்பத்தைந்து இலட்சம் வாக்குகள் உள்ளவர்களுக்கு இருநூறு முந்நூறு பேரை இத்தகைய போராட்டங்களுக்குக் கொண்டு வருவது ஒன்றும் சிரமமில்லை.

நாங்கள் அரசியல் செய்தவாறே நாட்டு மக்களை பாதுகாக்கிறோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்ற நாம் நடவடிக்கை எடுப்போம்.

ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் உள்ளன.

அது ஒடுக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சி.பணத்திற்காக எதையும் செய்வார்கள். இந்த நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதிக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் எனறும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US