நிதி அமைச்சரின் முதலாவது சட்டமூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதாகும்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள முதலாவது சட்ட மூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்ட மூலமாகும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சபை உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசாங்கமானது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு நிவாரணங்களை வழங்கும் சட்ட மூலமொன்றையே கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு நெருக்கமானவர்களுக்கு நலன்களை வழங்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நண்பர்கள் மோசடியான வழிகளில் ஈட்டிய பணத்தை தூய்மையாக்குவதற்கு ஆதரவளிப்பது ஏற்புடைதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுளளார்.
கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri