இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதவிக்கு ஜூலி சுங் பெயர் பரிந்துரை! - ஜோ பைடன் அறிவிப்பு
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங்கை நியமிக்க அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை தகவல்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங், கலிபோர்னியா-சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.
பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் ஆகிய மொழிகளை பேசக்கூடியவர்.
அமெரிக்காவின் செனட் சபை நியமனத்தை உறுதிசெய்தால் ஜூலி சுங் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படுவார்.
தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக அலைனா டெப்லிஸ் செயற்பட்டு வருகின்றார். இவர் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.