வாடகை வாகனத்தால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைக்கப்போகும் வருமானம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஒவ்வொரு PickMe வாடகை வாகனத்திற்கும் 700 ரூபா வீதம் விமான நிலையத்திற்கு வருமானம் கிடைக்கும் என செயலி அடிப்படையிலான ரைடு ஹெயிலிங் நிறுவனம் (app-based ride hailing company) தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயலி அடிப்படையிலான ரைடு ஹெயிலிங் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் ஒரு வாடகை வாகன நிறுத்தத்தை இயக்கும்.
விமான நிலையத்தில் வாடகை வாகனம்
புதிய ஏற்பாட்டின் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகையை எளிதாகக் கண்காணிக்கும் அதேவேளை விமான நிலையத்திற்கு ஒரு வாகனத்திற்கு 700 ரூபா கூடுதல் வருவாய் கிடைக்கும்.
விமான நிலையத்தின் சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் பகுதியிலிருந்து 100 சதுர அடி பரப்பளவிற்குள் PickMe வாடகை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாடகை வாகன போக்குவரத்து சேவையானது வாரத்தின் ஏழு நாட்களும், நாளொன்றின் 24 மணிநேரமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
