சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள முல்லைத்தீவு மாணவர்கள்
2025ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சை பெறுபேறுகளில், முல்லைத்தீவில் பல பாடசாலை மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று(19.06.2026) இரவு வெளியாகிய நிலையில், தமிழர் பகுதிகளில் பல மாணவ மாணவிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி சாதனையாளர்களாக மாறியுள்ளனர்.
வித்தியானந்த கல்லூரி
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் உள்ள வித்தியானந்த கல்லூரியின் 7 மாணவர்கள் 9A சித்திகளையும், 7 மாணவர்கள் 8A B சித்திகளையும், 4 மாணவர்கள் 7A 2B சித்திகளையும், 6 மாணவர்கள் 6A 2B C சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் பரீட்சைக்கு தோற்றிய 80% மாணவர்கள் க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயம்
அந்த வகையில் முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலய மாணவர்கள் க.பொ.த சாதாரண சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலம்
இதேவேளை, முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் க.பொ.த சாதாரண சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.




