முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனம் : விபத்துக்குள்ளான 2 வயது குழந்தை
பேருவளை நகரில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(14) மாலை பேருவளை நகரை அண்மித்த மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பேருவளை நகரை அண்மித்த மொரகல்ல பிரதேசத்தில் இரண்டு பெண்கள் நடந்து செல்கையில் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை மீது மோதியுள்ளது.
10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்ட குழந்தை
இந்த விபத்தில் பெண் ஒருவர் சுமந்து வந்த குழந்தை சுமார் 10 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்த காட்சியானது அருகில் இருந்த சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் ஒருவரும் 2 வயது குழந்தையும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு முச்சக்கர வண்டி சாரதி பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று(15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
