மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள்: பின்னணியில் பசில்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற மே தின நிகழ்வுகளின் போது பசில் ராஜபக்சவிற்கு கூடுதல் முக்கியத்துவம் வழக்கப்பட்டமையினால் இந்த நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
கட்சியின் தலைவர் பதவி
கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பசிலை கொண்டு வர ஒரு சிலர் முயற்சிப்பதனால் இவ்வாறு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவை கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் முயற்சியானது கட்சியின் நன்மதிப்பினை சிதைக்கும் செயல் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பசிலின் நடவடிக்கைகளினால் ஏற்கனவே சிலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டால் கட்சி இரண்டாக பிளவடையும் எனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam