நாடு திரும்பும் பசில்: ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் நடந்தாலும், பொதுத்தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்வதற்கு நாம் தயார். யார் என்ன சொன்னாலும் இலங்கையில் உள்ள பலமான கட்சி எமது கட்சி என்பதே உண்மை.
இந்நிலையில், தேர்தலை எதிர் கொள்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாளை தேர்தல் வைத்தாலும் நாம் தயார் என கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |