மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான 44 வயதுடைய தந்தை நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1921 சிறுவர் பிரிவு

தனது மகளை வீட்டில் வைத்து தந்தையார் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri